கல்லணையில் இன்று (ஜன. 14) மாலை 4 மணி நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 9,156 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் மழையின் காரணமாக தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல மேட்டூரில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி அணையில் 105. 45 அடியாகவும், 75. 085 டிஎம்சி தண்ணீர் இருப்பாக உள்ளது. அணைக்கு 2,507 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. டெல்டா பகுதியில் மழையின் காரணமாக அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... மணிமுத்தாறு அணையிலிருந்து 79 நாட்கள் பிசான சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் அறிவிப்பு!