ETV Bharat / state

கோவிட்-19 எதிரான போரில் காவல்துறையுடன் கைக்கோர்த்துள்ள இளைஞர் பட்டாளம்! - காவல்துறையினருக்கு உதவும் இளைஞர்கள்

தஞ்சாவூர் : கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் காவல்துறையினருக்கு உதவும் வகையில் 47 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கரோனா பரவல் பாதுகாப்புப் படையை உருவாக்கியுள்ளனர்.

war against Covid-19 : Youth Battalion joined with the Police
கோவிட்-19 எதிரான போரில் காவல்துறையுடன் கைக்கோர்த்துள்ள இளைஞர் பட்டாளம்!
author img

By

Published : Apr 15, 2020, 3:25 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழ் 58 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அங்கு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா 10 இளைஞர்கள் என்ற எண்ணிக்கையில் ஒன்று கூடி, அந்தந்த கிராம மக்களை பாதுகாத்திட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் தன்னார்வலர் கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.

முதல்கட்டமாக, தஞ்சை ஒரத்தநாடு ஒன்றியத்தை அடுத்துள்ள ஈச்சங்கோட்டை, பருத்திக்கொட்டை, ஒக்கநாடு மேலையூர், கண்ணுகுடி மேற்கு, தெலுங்கன் குடிக்காடு ஆகிய கிராமங்களில் இவர்கள் பணிகளில் ஈடுபடுவர்.

கரோனா நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த கிராம மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கிடவும், பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றிட விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடவும், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் வகையான உதவிகளையும் செய்திடவும் இந்த இளைஞர்கள் தன்னார்வ வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 எதிரான போரில் காவல்துறையுடன் கைக்கோர்த்துள்ள இளைஞர் பட்டாளம்!

இதன் தொடக்கவிழா ஒரத்தநாடு காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டத்தில் தஞ்சை மாவட்ட துணை ஆட்சியர் சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் வீரர்களுக்கு அடையாள அட்டை, டீசர்ட், முகக் கவசம் உள்ளிட்ட உபகரண பொருட்களை வழங்கினர். மேலும், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் வீரர்கள் தங்களது பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

இந்நிகழ்வில், ஒரத்தநாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன், ஒரத்தநாடு வட்டாட்சியர் அருள்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், காவல் ஆய்வாளர் சுமித்ரா, உதவி காவல் ஆய்வாளர் விஜயகிருஷ்ணன் ஒரத்தநாடு ஒன்றியப் பெருந்தலைவர் பார்வதி சிவசங்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : 'நிபந்தனைகளுடன் மீன்பிடிக்கச் செல்லலாம்' - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.