தஞ்சாவூர் அருகே மருங்குளம் 4 ரோடு சந்திப்பில் சுமார் 100 கடைகள் உள்ளன. அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 கிராமங்களுக்கு மையமாக இந்தக் கடைகளில்தான் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஒட்டுமொத்தமாக அனைத்து கடைகளையும் மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருங்குளம் 4 ரோட்டுக்கு அருகில் உள்ள கிராம மக்கள் யாரும் பொருள்கள் வாங்க வரவேண்டாம் எனவும், ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளனர் .
மேலும் அப்பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க், மருந்து கடைகள், டாஸ்மாக் கடைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. அதேசமயம் டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் வந்து மது அருந்தி செல்வதால், தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக கூறி, டாஸ்மாக் கடைகளை 15 தினங்களுக்கு மூட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.