ETV Bharat / state

வைகுண்ட ஏகாதசிக்கு சரித்திர நாடகங்களை நடத்தும் கிராம மக்கள்

தஞ்சாவூர் அருகே வைகுண்ட ஏகாதசியின் போது, கிராம மக்கள் இரவில் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக சரித்திர நாடகங்களை மூன்று நாட்களாக நடத்தி வந்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசிக்கு சரித்திர நாடகங்கள் நடத்தி வரும் கிராம மக்கள்

author img

By

Published : Jan 3, 2023, 5:57 PM IST

வைகுண்ட ஏகாதசிக்கு சரித்திர நாடகங்கள் நடத்தி வரும் கிராம மக்கள்

தஞ்சாவூர்: அருகே கொல்லாங்கரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்துகொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.

இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுது போக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது சரித்திர நாடகங்களான இராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நாடகங்களுக்குத் தேவையான கதாப்பாத்திரங்களாக கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர். இதில் கிராம மக்கள் கலந்து நாடகங்களை கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க:பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.