தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் சார் ஆட்சியராக இருந்துவருபவர் கிளாஸ்டன் புஸ்பராஜ். ஐஏஎஸ் அலுவலரான இவர் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சில கிராம உதவியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இடம் மாறுதல் செய்துள்ளார்.
இதையடுத்து இந்த நடவடிக்கையை கண்டித்து கிராம உதவியாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சார் ஆட்சியருக்கு எதிராகவும், இடம் மாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி புரிந்த இடத்துக்கே மாற்ற வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: வங்கி மோசடி வழக்கு: அதிமுக முன்னாள் எம்.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு!