தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரத்தினம்(65). அவரது வீட்டிற்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் , கட்ட பிரகாஷ் என்ற இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டு, அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை பார்த்த முதியவர் ரத்தினம் அந்த இளைஞர்களை, தன் வீட்டருகே ஏன் அடிக்கடி வந்து நின்று செல்போனில் பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் , கட்டபிரகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்களும் ரத்தினத்தை தாக்கி கீழே தள்ளி விட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து முதியோர் ரத்தினத்தின் மகன் ராமு அளித்த புகாரின்பேரில் சுவாமிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய இரண்டு இளைஞர்களைக் கைது செய்தனர்.