ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல் எதிரொலி; 10 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில், மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 23 hours ago

சென்னை: ஃபெஞ்சல் புயல், மழை பாதிப்புகளின் காரணமாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இம்மாதம் மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று நுகர்வோரிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டித்து மின்சாரத் துறை செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

இதையும் படிங்க : ஃபெஞ்சல் புயல், மழை: ரயில்களின் தாமதமும் பயணிகளின் பாதுகாப்பும் - சு.வெங்கடேசன் எம்பி அளித்த தகவல்!

அதைத் தொடர்ந்து ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.