ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல், மழை: ரயில்களின் தாமதமும் பயணிகளின் பாதுகாப்பும் - சு.வெங்கடேசன் எம்பி அளித்த தகவல்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து சேவையின் நிலை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விரிவான தகவல்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (Credits - Su Venkatesan MP 'X' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மதுரை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால் விழுப்புரம் பகுதியில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, அதில் செல்லும் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், காலையிலிருந்து ரயில் பயணிகள் மற்றும் பயணிகளின் உறவினர்களிடமிருந்து, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு புறம் பயணிகளுடனும், இன்னொரு புறம் தெற்கு இரயில்வேயின் தலைமையகத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். யாரும் பதற்றமடைய வேண்டாம். ரயில்வே நிர்வாகம் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து நிலைமையை திறம்பட கையாண்டு வருகின்றனர் என்பதை பயணிகளுக்கு தெரிவித்தபடி உள்ளேன்.

நேரத்தில் மாற்றம்: ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த தகவலை கீழே பதிவிட்டுள்ளேன். கீழே உள்ள இரயில்கள் தவிர தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பிற ரயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளன. விரைவில் அவைகள் அனைத்தும் நிறைவிடத்திற்கு வந்து சேரும்.

சென்னை - விழுப்புரம் இடையே உள்ள முக்கிய வழித்தடம் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனர். எனவே இன்று இரவு சென்னையிலிருந்து புறப்படும் இரயில்கள் அனேகமாக ரத்தாக வாய்ப்பில்லை. தேவைப்பட்டால் புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதத்தின் தனித்துவம்: நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு வண்டி இப்போது வாலாஜா ரோடு கடந்துள்ளது. பயணிகளுக்கு காலை உணவுை திருக்கோவிலூர் மக்கள் தந்துள்ளனர். காட்பாடியில் அவரவர் வாங்கிக் கொண்டனர் என்று இரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருபுறம், இந்த நிலைமையை திறம்பட கையாளப் பெருக்கெடுத்தோடும் நீருக்கு நடுவே நின்று தண்டவாளங்களை சரிசெய்து கொண்டிருக்கும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் விழிப்போடு இயங்கிக்கொண்டிருக்கும் ரயில்வே அலுவலர்கள். மறுபுறம், எங்கெங்கோ சென்றபடி நகரும் ரயிலுக்குள் நிலைமையை சமாளித்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகள். இருமுனைகளின் குரல்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். பெரும் புயலும், பேரிடரும் சந்தித்து மீளும் வலிமையே மனிதத்தின் தனித்துவம்.

இதையும் படிங்க: பேயாட்டம் போட்ட ஃபெஞ்சல் புயல்: 300 ஆண்டுகளில் நடந்ததே இல்லை

ரயில்வே நிர்வாக தகவல்கள்:

1.சென்னை பிரிவு;

  • 17653 கச்சேகுடா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.
  • 17655 காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி சர்கார் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.
  • 560 உணவுப் பொட்டலங்களும் 700 தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன சிக்கித் தவிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன

2.திருச்சி பிரிவு;

  • போக்குவரத்து ஏற்பாடுகள்: மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 2700க்கும் மேற்பட்ட பயணிகளை சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல மொத்தம் 27 பிரத்தியேக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.
  • உணவு மற்றும் நீர் விநியோகம்: பாதிக்கப்பட்ட ரயில்களில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் இடையூறு ஏற்படும் போது அவர்களின் வசதி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக 3000 உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
  • பாதுகாப்பான போக்குவரத்து: பேருந்துகள் பயணிகளை பாதுகாப்பாக சென்னையில் அவர்கள் சேருமிடத்திற்கு ஏற்றிச் சென்றன.

3.பேருந்துகளும் பயணிகளும்;

  • மாம்பழப்பட்டில் (MMP) - 16 பேருந்துகள், 1500 பயணிகள்
  • வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 5 பேருந்துகள், 600 பயணிகள்
  • விழுப்புரம் ஜன (VM) - 5 பேருந்துகள், 600 பயணிகள்

4.உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர்;

  • மாம்பழப்பட்டில் (MMP) - 450 உணவுப் பொட்டலங்கள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள்
  • வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 450 உணவுப் பொட்டலங்கள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள்
  • விழுப்புரம் ஜன. (VM) - 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள்
  • திருவண்ணாமலையில் (TNM) - 100 உணவுப் பொட்டலங்கள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டுள்ளன.

5.நிறுத்தப்பட்டுள்ள ரயில்கள்;

  • பண்ருட்டி நிலையம் - ரயில் எண் 20606 (TCN-MS)
  • திருப்பாதிரிப்புலியூர் நிலையம் - ரயில் எண் 17408 (MQ-TPTY)
  • விழுப்புரம் ஜே.என் நிலையம் - ரயில் எண்கள் 12694 (TN-MS), 22662 (RMM-MS) மற்றும் 16752 (RMM-MS)
  • வெங்கடேசபுர நிலையம் - ரயில் எண் 20636 (QLN-MS)
  • மாம்பழப்பட்டி நிலையம் - ரயில் எண்கள் 12662 (SCT-MS) மற்றும் 12638 (MDU-MS)

இவ்வாராக ரயில்களின் நிலமையும் மற்றும் பயணிகளின் பாதுகாப்பும் குறித்த விரிவான தகவல்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு: இதற்கிடையே, ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழையின் காரணமாக, நேற்றைய முன்தினம் (நவ.30) மற்றும் நேற்று (டிச.01) ஆகிய தினங்களாக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.

ரயில்வே அதிகாரிகளின் கோரிக்கை: இதனை அடுத்து, தென்னக ரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருச்சி-சென்னை ரயில் வழித்தடம் மற்றும் விழுப்புரம்-காட்பாடி ரயில் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இடையில் ரயில்கள் நிறுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில், 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு: அதன் அடிப்படையில், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மாம்பழப்பட்டு ரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், வெங்கடேசபுரம் ரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், அரகண்டநல்லூர் ரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள் மற்றும் சென்னை செல்லும் பயணிகள் வசதிக்காக வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் கூடுதலாக 40 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.