ETV Bharat / state

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் ரத்த சுத்திகரிப்பு வசதி தொடக்கம்!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு வசதியின் மூலம், விஷ முறிவு, பாம்புக் கடி முதலிய நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்து உயிரைக் காப்பாற்ற முடியும்.

twenty five lakhs worth blood transfusion equipment initaited in tanjore medical college
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் இரத்த சுத்திகரிப்பு வசதி தொடக்கம்
author img

By

Published : Jul 2, 2023, 3:43 PM IST

தஞ்சாவூர்: தமிழ்நாட்டின் மிகவும் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளங்கி வருகிறது. இங்கு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து பல்வேறு சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 1 ) அன்று தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரத்ததான முகாம் காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் என 100 பேர் கலந்து கொண்டு நூறு யூனிட் வரை ரத்த தானம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு வார்டு 50இல், ரூபாய் 20 லட்சம் மதிப்பில் இரண்டு நவீன ரத்த சுத்திகரிப்பு வசதிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இக்கருவியினை, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள் தொடங்கி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கூறும்போது, ''தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் தொடங்கப்பட்டு உள்ள இந்த இரண்டு புதிய ரத்த சுத்திகரிப்பு கருவியின் மூலம், ஒரே நேரத்தில் நான்கு நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

மேலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 32 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக தொடங்கப்பட்ட இந்த ரத்த சுத்திகரிப்பு வசதியின் மூலம், விஷ முறிவு, பாம்புக் கடி முதலிய நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்து உயிரைக் காக்க முடியும்'' என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நிலைய மருத்துவர் செல்வம் உள்ளிட்ட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு அதிநவீன சிகிச்சை கருவிகளும் நிறுவப்பட்டு வருகின்றன.

ரூபாய் 25 கோடிக்கு மேலான மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சு கருவிகள் இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து, சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையக் கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் புற்றுநோயைக் கண்டறியும் அதிநவீன பாசிட்ரான் எமிசன் டோமோகிராபி ஸ்கேன் வசதி கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சுமார் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: தக்காளி விக்கிற விலைக்கு என்னமா ஒரு சலுகை - உ.பி. வர்த்தகரின் புது யுக்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.