தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தில் பிறந்த துளசி அய்யா வாண்டையார் ஆரம்ப காலத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பூண்டியில் கலை அறிவியல் கல்லூரியை தொடங்கி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்லூரி படிப்பை முடிப்பதற்குத் துணையாக இருந்து, கல்வி காவலர் என பெயர் பெற்றவர்.
இவர் தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 1991 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் தற்போது தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும், டிடிவி தினகரன் மகள் இருவருக்கும் அடுத்த மாதம் 23ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்திலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்த துளசி வாண்டையார், நேற்று (மே 17) அதிகாலை உயிரிழந்தார். இவரது, உடல் சொந்த ஊரான பூண்டிக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு, பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: துளசி வாண்டையார் மறைவு: தலைவர்கள் இரங்கல்