ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம்: ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிசேகம்: ஒருங்கினைப்பு குழு கூட்டம்!
author img

By

Published : Jul 10, 2019, 2:47 PM IST

தஞ்சாவூரில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில் எனும் பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கட்டுமான வசதிகள் மேம்படுத்தும் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் இன்று நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிசேகம்: ஒருங்கினைப்பு குழு கூட்டம்!

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட கட்டுமான வசதிகள் மேம்படுத்த அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

தஞ்சாவூர் மாநகராட்சி, சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை, தொல்லியல்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை திறம்பட செய்து கும்பாபிஷேக நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Intro:தஞ்சாவூர் ஜுலை 10

பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்றது
Body:

தஞ்சாவூரில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்க கூடிய தஞ்சை பெரிய கோவில் எனும்
பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு கட்டுமான வசதிகள் மேம்படுத்துதல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர்
அண்ணாதுரை, நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது :

தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட கட்டுமான வசதிகள் மேம்படுத்த அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்;. தொல்லியல் துறை, தஞ்சாவூர் மாநகராட்சி, சுற்றுலாத்துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித் துறை, சுகாதார துறை, போக்குவரத்துத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருக்கோயில நிர்வாகம் ஆகிய துறைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியினை திறம்பட செய்து கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசினார்.
இக்கூட்டத்தில் பெருவுடையார் திருக்கோயில் வாகனம் நிறுத்துமிடம் அதிகரித்தல், குடிநீர் வசதி, பொருட்கள் பாதுகாப்பு அறை, புறக்காவல் நிலையம் அமைத்தல், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், கண்காணிப்பு கேமரா, மின் சாதனங்கள் மற்றும் ஒளி விளக்கு வசதியை மேம்படுத்துதல், உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல், கிரிவலபாதை மேம்படுத்துதல் ஆகிய குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் .ஜானகி ரவிந்திரன் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.