ETV Bharat / state

துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற என்.சி.சி. மாணவர்கள்! தமிழ்நாடு என்.சி.சி. தலைமை அதிகாரி பாராட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 11:19 AM IST

தஞ்சாவூரில், மாநில அளவிலான துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற என்.சி.சி. மாணவர்களுக்கு என்.சி.சி.யின் தமிழக தலைமை அதிகாரி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

தஞ்சாவூரில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டு
என்.சி.சி யின் தமிழக மாநில தலைமை அதிகாரி கமோடர் அதுல்குமார் ரஸ்தோகி
தஞ்சாவூரில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற என்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர்: கும்பகோணம் 8வது பட்டாலியன் என்.சி.சி(NCC) அலுவலகத்தில் மாநில அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவானது நேற்று (செப். 25) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக அரங்கில் நடந்த பாராட்டு விழாவில், துப்பாக்கி சுடுதல் போட்டியில், சாதனை படைத்த மாணவர், மாணவியர்கள், சிறந்த அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி என்.சி.சி யின் தமிழக மாநில தலைமை அதிகாரி கமோடர் அதுல்குமார் ரஸ்தோகி கௌரவித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து, அகில இந்திய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்ற, கும்பகோணம் அன்னை கல்லூரியின் இந்துஜா, சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்லூரியின் வித்யாஸ்ரீ மற்றும் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியின் சிவா ஆகியோரை பாராட்டி சான்றிதழ் அளித்தார்.

இதையும் படிங்க: "நெல்லிக்காய் மூட்டையாக சிதறிக்கிடந்த அதிமுகவை பாஜக தான் ஒன்று சேர்த்தது" - எச்.ராஜா அதிரடி

நிகழ்ச்சியில் பேசிய அவர், "என்.சி.சி ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் ஒழுக்கம், தலைமை பண்பு மற்றும் நாட்டுப் பற்றினை அளித்து ஒரு சிறந்த குடிமகனாக திகழ வைக்கிறது" என்று கூறினார். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற என்.சி.சி மாணவ, மாணவியர்களுக்கு இந்திய ராணுவத்தில், அதிகாரிகளாக நுழைவதற்கான பேச்சுத்திறன் மற்றும் வெற்றிப் பாதையை பற்றி விளக்கிக் கூறினார்.

இறுதியாக, மாணவர்களிடம் என்.சி.சி யின் உத்வேகத்தையும், ஆர்வத்தையும் அளித்தமைக்காக 8வது பட்டாலியனின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், கும்பகோணம் எட்டாவது என்சிசி பட்டாலியனில் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: Sathanur Dam : வேகமாக நிரம்பும் சாத்தனூர் அணை! தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.