ETV Bharat / state

நள்ளிரவில் திடீர் தீ விபத்து, மூவர் படுகாயம் - அதிராம்பட்டிணத்தில் திடீர் தீ விபத்து

தஞ்சாவூர்: அதிராம்பட்டிணத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு மூன்று வீடுகள் எரிந்து சாம்பலானது. இதனால் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

fire accident in adirampattinam
author img

By

Published : Nov 20, 2019, 6:09 PM IST

பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட மன்னப்பன் குளத்தெருவில் வசிப்பவர் கோபு. இவர் அதே பகுதியில் மூன்று வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீடுகளில் மரியா (70) பாப்பாத்தி (75) மோகன் (55) ஆகியோர், தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இவர்களது வீடுகளில் தீப்பிடித்தது. தூங்கிக்கொண்டிருந்த மூவரும் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற முயற்சி செய்தனர். இருந்தும் வேகமாக பரவிய தீயில் சிக்கி மூவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தீ விபத்துப் பகுதி

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அதிராம்பட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொல்கத்தாவில் ஒரு மீனோட விலை 12 ஆயிரம் ரூபாயா...?

Intro: அதிராம்பட்டிணத்தில் நள்ளிரவில் தீ விபத்து மூன்று வீடுகள் எரிந்து சாம்பல் 3 பேர் படுகாயம்Body:பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மன்னப்பன் குளத்தெரு.இப்பகுதியில் வசிப்பவர் கோபு. இவர் அதே பகுதியில் மூன்று வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வாடகை வீட்டில் கணவன் இறந்துவிட்ட நிலையில் மரியா வயது 70, பாப்பாத்தி வயது 75 ,ஆகிய இருவரும் தனித்தனி வீடுகளிலும் அதேபோல மனைவி இறந்துவிட்ட நிலையில் மோகன் வயது 55 தனி வீட்டிலும் வசித்து வருகின்றனர் .இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இவர்களது வீடு தீப்பற்றி எரிந்தது. இதை அடுத்து தூங்கிக்கொண்டிருந்த மூவரும் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற முயற்சி செய்தனர் .இருந்தும் தீ விபத்துக்கு உள்ளாகி மூவரும் படுகாயமடைந்த நிலையில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து தீ பரவாமல் இருக்க உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர். இதுபற்றி அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.