ETV Bharat / state

இத்தனை நாள்களாக தலைவர்கள் சிலை... இன்று திருவள்ளுவர் சிலைக்கே இப்படியா! - வல்லம் டிஎஸ்பி சீதாராமன்

தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது கறுப்பு மை பூசி, மாட்டு சாணத்தை வீசி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

thiruvalluvar-statue-disrespected-in-thanjavur
author img

By

Published : Nov 4, 2019, 10:02 AM IST

Updated : Nov 4, 2019, 11:40 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டு சாணத்தை வீசியும் சென்றனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வல்லம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சீதாராமன், திருவள்ளுவர் சிலையினைப் பார்வையிட்டார். அதையடுத்து திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்து மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவள்ளுவர் சிலை மீது அவமரியாதை செய்த நபர்களை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை

இத்தனை நாள்களாக தலைவர்கள் சிலைகளுக்கு அவமரியாதை ஏற்பட்டு வந்தநிலையில், உலகப் பொதுமறை எழுதி உலகத்தில் உள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருவள்ளுவர் சிலை மீதும் சாணத்தை வீசி சென்றது தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பட்டேல் சிலையை பார்வையிட்ட தேவகவுடா, மகிழ்ச்சி வெளிப்படுத்திய நரேந்திர மோடி

Intro:Body:

தஞ்சை : பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் - தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை. #Thanjavur | #Thiruvalluvar

தஞ்சை: பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மர்ம நபர்கள் அவமதிப்பு #ThiruvalluvarStatue #Thanjavur

Conclusion:
Last Updated : Nov 4, 2019, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.