தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழையினால் திருவையாறு தாலுகாவில் 19 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
திருவையாறில் மூன்று வீடுகளும், திருப்பழனத்தில் ஒரு வீடும், கல்யாணபுரம் 1ஆம் சேத்தியில் இரண்டு வீடுகளும், கல்யாணபுரம் 2ஆம் சேத்தியில் ஒரு வீடும், கீழத்திருப்பூந்துருத்தியில் இரண்டு வீடுகளும், ராஜேந்திரத்தில் ஒரு வீடும், திருச்சோற்றுத்துறையில் இரண்டு வீடுகளும், கருப்பூரில் ஒரு வீடும், நடுக்காவேரியில் ஒரு வீடும், மேலத்திருப்பூந்துருத்தியில் நான்கு வீடுகளும் மொத்தம் 17 கூரை வீடுகளும், இரண்டு ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமாகின.
திருவையாறு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சாலையோர கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக கடை வீதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடியே இருந்தன.
இதையும் படிங்க: பிற ஆண்டு மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!