தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திருவையாறு அடுத்த திருவாலம்பொழில் வேகத்தடை அருகே தேர்தல் பறக்கும் படையினர், இன்று (மார்ச் 8) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தஞ்சாவூர் மாவட்டம், காட்டூர், நாக்கான் கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தை ஆய்வு செய்த போது, அதில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 14 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.
பறக்கும் படையினர் விசாரணையில்:
இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏடிஎம்களில் பணம் நிரம்பும் பணி செய்து வருவது தெரியவந்தது. திருவையாறு, கண்டியூர், திருக்காட்டுப்பள்ளி உள்ள ஆறு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை பார்த்து வருவதாகவும், தற்போது திருவையாறு, கண்டியூரில் ரூ. 6 லட்சத்து 80 ஆயிரம் பணம் நிரப்பிவிட்டு, திருக்காட்டுப்பள்ளி ஏடிஎம்மில் பணம் வைப்பதற்காக பைக்கில் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அரசு கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிக்கியது 15 கிலோ தங்கம்!