தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மேலக்கொட்டையூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் அலுவலராக அசாருதீன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் நாகக்குடி கிராம நிர்வாக அலுவலராக பாலமுரளி என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு மேலக்கொட்டையூர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து கருகின.
இதற்கு முன்னதாக நாகக்குடி கிராம நிர்வாக அலுவலகம் இடியும் நிலையில் இருந்ததால் அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கொட்டையூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் இரு அலுவலகங்களைச் சேர்ந்த ஆவணங்களும் தீக்கிரையானது.
தீவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அசாருதீன், பாலமுரளி ஆகிய இருவரும் தீ மேலும் பரவாமல் இருக்க பொதுமக்களுடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
தகவலறிந்த வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் விரைந்து வந்து பார்வையிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், கிழக்கு காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலகத்தில் எவ்வாறு தீவிபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து தீவிர விசாரணையை செய்து வருகின்றனர். இத்தீவிபத்தினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: