மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல் துறையினர் தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர்.
இதில் பலர் படுகாயமடைந்த சம்பவம், நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு உள்பட மேற்கு வங்கம், மகராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகாவில் நேற்றுமுதல் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களைக் கலைந்து செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு மறுத்த மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களைக் கலைக்க காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி, குண்டுகட்டையாக அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனால் தஞ்சை - திருச்சி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதையும் படியுங்க: பேருந்தை கொளுத்த போலீஸ், மாணவர்களை அடிக்க அடியாட்கள்!