தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரில் உள்ள சாலை பழுதடைந்த நிலையில், அதை சீரமைக்கும் பணிக்கு நகராட்சி மூலம் டென்டர் அறிவிக்கப்பட்டு அதன் பணி தீவிரமாக முடிக்கிவிடப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாக பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இதனால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பள்ளி குழந்தைகள் ஒரு கிலோமீட்டர் தூரம் அந்த சாலைகளில் நடந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த சாலை பணிகளை முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.