தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது ஆதனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்குச் செல்லும் சாலை மிக முக்கியமான சாலை ஆகும். இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு, இந்த ஏரி தான் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
இந்நிலையில், இப்பகுதியிலுள்ள விளைநிலங்களுக்கு விவசாய தேவைகளுக்கு உரம் மற்றும் பல பொருட்களை ஏற்றிச்செல்ல இந்த சாலையை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலிருந்து விளையும் நெல் மூட்டைகளை இந்த வழியாக கொண்டு செல்ல, இந்தச் சாலையைத்தான் மக்கள் நம்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சாலை மிகவும் பழுதுதடைந்து இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் அளவிற்கு மிக மோசமாக உள்ளது. சாலையின் இரு பக்கங்களிலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியும் விரைவில் சேதமடையும் என்ற பயத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!