ETV Bharat / state

தஞ்சை பெரியகோவில்... மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

thanjavur
thanjavur
author img

By

Published : Jun 19, 2023, 11:47 AM IST

தஞ்சை பெரியகோவில்... மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்!

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலில் தனி சந்நிதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும். வேறு எங்கும் நடைபெறுவது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ஆம் ஆண்டு பெருவிழா தஞ்சை பெரியகோவிலில் நேற்று ஜூன் 18ஆம் தேதி ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் சிறப்பாகத் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய்ப்பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதான்ய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அபிஷேகமும் பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; இரண்டு பேர் கைது, ஒருவர் தலைமறைவு!

அதனைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதலும் நடைபெறும். மாலை நேரங்களில் நந்தி மண்டபத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து கொள்வர். அதைப்போல் முதல் நாள் 18ஆம் தேதி அன்று சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்று, பின்னர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சுமார் 100 கிலோ கொண்ட இனிப்பு வகைகளான ஜாங்கிரி, லட்டு, குலோப்ஜாமுன், மைசூர் பாகு, பால்கோவா உள்ளிட்டப் பல்வேறு இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் கலை நிகழ்ச்சியாக ராமநாதன், யுவராஜ் சிறப்பு நாதஸ்வரம், பாபு, வெங்கடேசன் குழுவினரின் சிறப்பு தவில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இது குறித்து சிவாச்சாரியார் ஆனந்த் என்பவர் கூறும் போது; 'ஆஷாட நவராத்திரி என்பது மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடத்தப்படுவது ஆகும். நவராத்திரி நான்கு வகைப்படும். அதில் மஹா நவராத்திரி என்பது புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான ஆலயத்தில் நடைபெறும்.

அடுத்ததாக வசந்த நவராத்திரி என்பது சித்திரை வைகாசி மாதங்களில் வேறுபட்டு நடைபெறும். அதனையடுத்து சியாமளா நவராத்திரி தை மாதம் அமாவாசை நாட்களில் தொடங்கி 10 நாட்கள் ராஜ மாதங்கி என்கிற சரஸ்வதி ஆலயங்களில் நடைபெறும். கடைசியாக ஆஷாட நவராத்திரி என்பது தனித்துவமாக மஹா வாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறுவது ஆகும்.

மேலும் இந்த ஆஷாட நவராத்திரி விழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்' என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டும், இசை நிகழ்ச்சியைக் கண்டும் ரசித்தனர்.

இதையும் படிங்க: பெண்களை கேவலமாக பேசுவது தான் புது திராவிட மாடலா...? - நடிகை குஷ்பு ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.