தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் மருதுரை இன்று (அக்.1) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தஞ்சாவூரில் இதுவரை இரண்டரை லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக கரோனா தடுப்பு மருந்துகள் தஞ்சை மாவட்டத்தில் அதிகளவில் கையிருப்பில் உள்ளது.
கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் பொதுமக்கள் அச்சப்படுவததோ ,அவமானமாகவே, நினைக்கக் கூடாது தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கரோனா தொற்றால் உயிரிழந்த பட்டுக்கோட்டை சேர்ந்த சலீம் என்பவரின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி சட்ட மருத்துவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற உடற்கூறு ஆய்வில், அவரது உடல் உறுப்புகள் எதுவும் திருடவில்லை என்றும், அவரது உறவினர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இதுபோன்று மருத்துவர்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் குற்றச்சாட்டுகள் வருவதை, நாங்கள் கடந்து தான் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்