டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் செய்தனர்.
அப்போது, கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து டெல்லி தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பேராசிரியர்கள் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க...