ETV Bharat / state

நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன?

தஞ்சை: பொதுமக்கள் நெருக்கமாக வாழக்கூடிய பகுதிகளில் நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

-spread-of-the-disease
-spread-of-the-disease
author img

By

Published : Oct 28, 2020, 10:00 AM IST

தற்போது வடகிழக்குப் பருவமழைக்காலம் என்பதால் பல பகுதிகளில் பலத்த மழைபெய்யத் தொடங்கியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து டெங்கு காய்ச்சல் சீசனும் தொடங்கிவிட்டது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு எப்போதுமே மழைக்காலத்தின் முடிவில் ஏற்படத் தொடங்குகிறது. 'டெங்கு காய்ச்சல்' என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். ஏற்கனவே கரோனாவோடு போராடிக் கொண்டிருக்கும் நமக்கு இந்த டெங்கு, மேலும் ஒரு சவாலாக இருக்கும்.

கரோனா நோய் தொற்று தாக்கத்திலிருந்து இந்தியாவில் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வு என்பது மக்களிடையே அதிகமாகி உள்ளது. பொது மக்கள் பரவலாக பயணிக்கும், மிகவும் நெருக்கமாக பயணிக்கும் பேருந்து நிலையம், சந்தை போன்றவற்றை மட்டுமல்லாமல் மிகவும் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புகளிலும் நோய் தொற்று எளிதில் பரவ கூடுவதால் அரசு அதனை தடுப்பதற்க்காக எந்தவிதமான பாதுகாப்பு முறைகளை கையாள்கிறது. மேலும் என்னென்ன நோய் தொற்று பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்பு பகுதியில் தொற்று பரவும் என்பனவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டெங்கு, மலேரியா, பன்றி காய்ச்சல், கரோனா ,பாக்டீரியா தொற்று உள்ளிட்ட எண்ணற்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாகவும் இதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கூடும் இடத்தில் முக கவசம், தகுந்த இடைவேளை, இருமல், சளி உள்ளவர்களிடம் இருந்து சற்று தள்ளி நிற்பதாலும், தனது குடும்பத்தினருக்கு இருமல் போன்றவற்றை இருந்தால் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை உட்கொள்வதாலும் , மிகவும் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டால் உடனடியாக அதனை மாநகராட்சிக்கு தெரிவிப்பதால் கொசுக்களால் பரவக்கூடிய நோய் தொற்றான டெங்கு, மலேரியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவர் ஸ்ரீராம்

தஞ்சாவூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை 51 வார்டுகள் உள்ளன. அதில் மொத்தமாக நாளொன்றுக்கு 107 மெட்ரிக் டன் குப்பைகள் உற்பத்தியாகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மைக்ரோ காம்ப்ளக்ஸ் சென்டர் என தஞ்சை மாநகராட்சி முழுவதும் 14 இடத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் குப்பைகளை தரம் பிரித்து பயனுள்ளதாக மாற்ற முடியும். மத்திய அரசின் ஸ்வச் பாரத் கீழ் இத்திட்டம் மாநகராட்சி மூலம் செயல்பட இருக்கிறது எனக் கூறுகிறார் தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி.

மாநகராட்சி ஆணையர் ஜானகி ராவிந்திரன்.

அதுமட்டுமின்றி பொதுமக்கள் அதிகமாக, மிகவும் நெருக்கமாக வாழக்கூடிய பகுதிகளாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 65 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சுகாதாரத்ததைப் பின்பற்றும் வகையில் பொதுக் கழிப்பிடங்களில் தூய்மைப்படுத்தும் பணி அன்றாடம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்க்கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கு 215 பணித்தள பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் ஆறு நாள்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு வீடாக சென்று நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

இதுவரை தஞ்சை மாநகராட்சி பகுதியில் 1,500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பொதுமக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் மட்டும் 519 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடல் வெப்பநிலை, பல்சர், ஆக்சி மீட்டர் போன்ற கருவிகளுடன் உடலிலுள்ள ஆக்சிஜன் லெவல் கண்டறியப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்படுகிறது. மேலும். மக்களை தேடி தொடர் மருத்துவ முகாம்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் ஜானகி தெரிவித்துள்ளார்.

மேலும், தஞ்சையில் உள்ள பழைய கிருஷ்ணா பகுதியில் எந்த அடிப்படை தேவைகளும் நீண்ட வருடங்களாக பூர்த்தி செய்யப்படவில்லை என குற்றஞ்சாட்டுகிறார் அப்பகுதியை சேர்ந்த சதீஷ்.

நகரவாசி சதீஷ்

இதையும் படிங்க:

கரோனாவால் பாதிக்கப்பட்ட உச்ச வயதுவரம்பை எட்டும் தேர்வர்கள் : கூடுதல் வாய்ப்பு வழங்க மத்திய அரசு பரிசீலனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.