தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்யும்போது, எதிர்பாராமல் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த, பொதுப்பயிர் காப்பீட்டு நிறுவனம் ஒன்று நடப்பு ஆண்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு நெல் பயிருக்கு காப்பீடு செய்திட, தஞ்சாவூர் மாவட்டத்தில் 873 வருவாய் கிராமங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில், தங்களது விருப்பத்தின்பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.
கடன் பெறாத இதர விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவோ, வணிக வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நெல் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய டிசம்பர் 15ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
இருப்பினும் அதுவரை காத்திருக்காமல், உடனடியாக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியத் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்து சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அதிமுக அரசு செய்துள்ள அடுத்த துரோகம் இது!