ETV Bharat / state

ஐப்பசி மாத பௌர்ணமி: தஞ்சை பெருவுடையார் சிலைக்கு அன்னாபிஷேகம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி பெருவுடையார் பிரமாண்ட சிவன் சிலைக்கு அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது.

thanjavur temple
author img

By

Published : Nov 12, 2019, 9:40 AM IST

தஞ்சை பெரியகோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி இன்று அன்னாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்காக பக்தர்கள் ஆயிரம் கிலோ அரிசியும் 1000 காய் கனிகளையும் வழங்கியுள்ளனர்.

தஞ்சை பெரியகோயில் அன்னாபிஷேகம்

பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்பின் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இதனையொட்டி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. 108 மூட்டை அரிசியை சமைத்து அன்னமாக பெருவுடையாருக்கு சாத்தினர். இதனையடுத்து, லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், இந்து சமய அறநிலையத் துறையினர், தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:தஞ்சாவூர் நவ 11

தஞ்சை பெரியாகோவில்
ஐப்பசி மாத பவுர்ணமியை ஓட்டி நாளை பெருவுடையார் பிரமாண்ட சிவன் சிலைக்கு அண்ணாபிஷேகம்Body:

தமிழ் மன்னன்
மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் அதேபோல் இவ்வாண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நாளை(12-ந்தேதி) அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட உள்ளன. பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று.அதன் பின் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறுகிறது. பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னம் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும், நீர்நிலைகளில் அவை கரைக்கப்பட்டு ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும். திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாமல் உள்ள பெண்கள் இந்த அன்னத்தை உட்கொண்டால் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் இந்த அன்னாபிஷேக விழாவில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.