ETV Bharat / state

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் தீ விபத்து! - Tanjore Fire Officer

தஞ்சாவூர்: தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து

author img

By

Published : Mar 17, 2021, 10:53 PM IST

தஞ்சாவூர் வடக்கு வாசல் சிரேன் சத்திரம் ரோடு புண்ணியமூர்த்தி தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தழகு என்பவர் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்படவே, அது மளமளவென அடுத்தடுத்த குடிசை வீடுகளில் பரவியது.

தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து

இதனால் நான்கு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.