தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள நாணல் புதரில் இன்று மதியம் 12 மணியளவில் மண்டை ஓடு, எலும்புகள், துணி, கொலுசு மற்றும் கால் செருப்பு ஆகியப் பொருட்கள் கிடந்துள்ளன.
அப்போது அவ்வழியாக ஆடு மேய்க்கச் சென்ற சிறுவர்கள் பார்த்துவிட்டு, உடனடியாக அப்பகுதி விஏஓ ஆனந்தனிடம் தெரியப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக தோகூர் காவல் நிலையத்திற்கு விஏஓ ஆனந்தன் தெரியப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் ஆணையர் புகழேந்தி, காவல் அலுவலர் கென்னடி, காவல் துறை உதவி ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்திற்குத் தஞ்சை தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா என்றும் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், முப்பதிலிருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணாக இருக்கலாம் என்றும், அவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்பதும் விசாரணையின் பேரில் தெரியவரும். மேலும், இவர் கொலை செய்யப்பட்டு தூக்கிவந்து போடப்பட்டரா அல்லது கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, இங்கு கொண்டுவரப்பட்டதா என்பது கூட, விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு இலவசம்! - மாநகராட்சி அறிவிப்பு