தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கான சிறந்த விருதை அண்மையில் பெற்றது. இந்த நகராட்சிக்கு சிறப்பு நிதி அரசால் வழங்கப்பட்டுவருகிறது. இருப்பினும், நகரின் பெரும்பாலான இடங்களில் கழிவு நீர் வாய்க்கால் திறந்த வெளியில் இருக்கிறது.
இதன் மூலம் ஏற்படும் துர்நாற்றத்தால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. சில இடங்களில் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு கிடப்பதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
புறவழிச்சாலை பகுதியில் மதுக்கடைகளின் கழிவுகள், உணவுக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. சிறப்பு விருது பெற்ற பட்டுக்கோட்டை நகராட்சியின் தற்போதைய நிலைமையை எண்ணி மக்கள் வேதனைப்படுகின்றனர்.
இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல்