தஞ்சாவூர்: உலகெங்கும் உள்ள இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுவதாலும், தொடர்ந்து மறுதினம் அமாவாசை, கேதார கௌரி விரதம், கந்தசஷ்டி விழா தொடக்கம் என விசேஷங்கள் அணிவகுப்பதால், பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது இதனால் தேவைக்கு ஏற்ப, பூக்கள் வரத்து இல்லாத நிலையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை, முல்லை மற்றும் கனகாம்பரம் ஆகியவை கிலோ ரூ.1000 இருந்து ரூ,1,200 வரை விற்பனையாகிறது. சிவப்பு, மஞ்சள் ரோஜா ரகங்கள் கிலோ ரூ.160க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.200க்கும் விற்பனை ஆகி வருகிறது.
இதையடுத்து கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் அருகேயுள்ள பூக்கடைத்தெரு, பொற்றாமரை குளம் வடகரை, கும்பேஸ்வரன் வடக்கு வீதி ஆகிய இடங்களில் உள்ள பூக்கடைகளில் மக்கள் ஆர்வமாக பூக்கள் வாங்க குவிந்துள்ளனர். ஆனால் விலையை கேட்டவுடன் அதிர்ந்தாலும், பண்டிகை நாட்களில் பூக்கள் வாங்காமல் எப்படி நிறைக்கும் என கருதி, தங்களது தேவையை குறைத்து கொண்டு வேறு வழியில்லாமல் குறைந்த எடையில் பூக்களை வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:தீபாவளி பட்டாசு - கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் கவனம்