தமிழகத்தில் மக்களவை தேர்ததல் மற்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வது நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தஞ்சை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அண்ணாதுரையிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதில் அதிமுக கூட்டணியில் தஞ்சையில் களமிறங்கும் தமாகா கட்சி வேட்பாளர் நடராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். தஞ்சாவூர் நாடளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்.எஸ் பழனிமாணிக்கமும் வேட்புமனு தாக்கல் செய்தார்.