உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பின்பு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் வந்து செல்வது வழக்கம். தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்குராஜ், கும்பாபிஷேகத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனைக்குப் பின்புதான் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
மேலும் விவிஐபியாக வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 50 முதல் 100 பேருக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், அதிகளவில் உடம்பில் காயங்கள், சளி, இருமல் ஆகியவை இருந்தால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவக் கல்லூரிகளுள் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அவசர உதவியைப் பொறுத்தவரை ஆறு ஆம்புலன்சுகள் கோயிலுக்கு உள்ளேயும் ஆறு ஆம்புலன்சுகள் கோயிலுக்கு வெளியேயும் தயார் நிலையில் இருக்கும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அண்ணா நினைவு நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை