ETV Bharat / state

'இலவச மின்சாரத்தை நிறுத்தினால் சிறை செல்லும் போராட்டம்'- கே.எஸ். அழகிரி - விவசாயிகளுக்கு வழங்கபடும் இலவச மின்சாரம் ரத்து

தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை நிறுத்தினால், காங்கிரஸ் கட்சி சார்பில் சிறை செல்லும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

tamilnadu congress leader about electrical correction

author img

By

Published : May 26, 2020, 10:05 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, 'விவசாயிகளுக்கு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு இலவச மின்சாரத்தை அளித்தது. ஆனால், அந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு சட்ட முன்வடிவு கொண்டுவந்துள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், நீட் தேர்விற்கு எதிராக இரண்டு முறை சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டும், இதுவரை நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது. அதேபோல்தான், இதுவும் மத்திய அரசால் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டிற்கு கடன் வழங்க வேண்டும் என்ற காரணத்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்தாகும் என்ற மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக சிறைசெல்லும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்தால், விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியாமல், அமெரிக்காவிடம் அதிக விலை கொடுத்து கோதுமை, அரிசி உள்ளிட்டவற்றை கையேந்தி வாங்கும் நிலை ஏற்படும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:'இலவச மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் திருத்தச் சட்டத்தை ஏற்போம்' - அமைச்சர் தங்கமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.