தஞ்சையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது நுழைவாயில் மல்டி ஸ்பெஷாலிட்டி வளாகத்துக்கு அருகே 5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மர்ம பொருள் ஒன்று இருந்துள்ளது.
நூல்களால் சுற்றப்பட்டு வெடிகுண்டு போன்றிருந்த மர்ம பொருளை கண்டு சந்தேகமடைந்த நோயாளி ஒருவர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அப்போது அதில் வெடி மருந்து ஏதும் இல்லாதது தெரியவந்தது. அதையடுத்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள், சமூக விரோதிகள் சிலர் பொது மக்களை அச்சப்படுத்தும் வகையில் இது போன்று செய்திருக்கலாம் என தெரிவித்தனர்.