ETV Bharat / state

களைகட்டும் தாராசுரம் காய்கறி அங்காடி.. பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்! - தஞ்சாவூர் மாவட்டம்

Sugarcane price down: நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் மொத்த மற்றும் சில்லறை காய்கறி அங்காடியில் கரும்பு வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று வரை ரூ.300 வரை விற்கப்பட்டு வந்த 1 கட்டு கரும்பு, இன்று ரூபாய் 150 முதல் 250 வரை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்
களைகட்டும் தாராசுரம் காய்கறி அங்காடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 1:01 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் பகுதியில் உள்ள தாராசுரம் மொத்த மற்றும் சில்லறை காய்கறி அங்காடியில், இன்று வியாபாரம் களைகட்டியுள்ளது. பொங்கலுக்குத் தேவையான காய்கறிகள், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியவற்றை வாங்க மக்கள் குவிந்தனர்.

நாளை (ஜன.15) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில், தமிழகத்திலேயே 2வது மிகப்பெரிய காய்கறி வணிகச் சந்தையாக திகழ்வது கும்பகோணம் தாராசுரம் பகுதியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை காய்கறி வணிக அங்காடி.

இந்த அங்காடியில் இருந்து நாள்தோறும் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், அரியலூர் மாவட்டங்களுக்கும், அதிக அளவிலான காய்கறிகள் அங்குள்ள சில்லரை காய்கறிக் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு களைக்கட்டும் பனங்கிழங்கு விற்பனை..விவசாயிகள் மகிழ்ச்சி!

இந்நிலையில், நாளை பொழுது விடிந்தால் பொங்கல் பண்டிகை என்ற நிலையில், இன்று தாராசுரம் காய்கறி அங்காடியில், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் காய்கறிகள் வாங்க அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் சிறிதளவு போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

பொங்கலை ஒட்டி, கூட்டத்தில் காய்கறி மூட்டைகளை சுமந்து வருவது சிரமம் என்பதால், தூக்கு கூலியை 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இதனால், காய்கறி விலைகளும் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக,

  • தக்காளி - ரூ.30
  • மொச்சைகாய் - ரூ.80
  • முள்ளங்கி - ரூ.80
  • பீட்ரூட் - ரூ.50
  • பரங்கிக்காய் - ரூ.30
  • பச்சை மிளகாய் - ரூ.60
  • மாங்காய் - ரூ.50
  • புடலங்காய் - ரூ.40

என்ற ரீதியில் காய்கறிகள் விற்பனையாகி வருகிறது. அதே வேளையில், நேற்று வரை 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, ரூபாய் 300 வரை விற்பனையான நிலையில், இன்று வரத்து அதிகரித்துள்ளதால் 150 முதல் 250 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அதே போன்று வாழைப்பழம், வாழைத்தார் ஆகியவை அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாததால், இதன் விலையும் தார் ஒன்றுக்கு 450 முதல் 650 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும், வாழைப்பழம் 100 ரூபாய்க்கு 4 சீப்புகள் என விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜன.16-ல் சூரியூர் ஜல்லிக்கட்டு: சூடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு மைதானம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.