ETV Bharat / state

தஞ்சையில் 9ஆவது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்!

தருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் 9-வது நாளாக இன்று தப்பு அடித்து, தண்டோரா போட்டு போராட்டம் நடத்தினர்.

sugarcane farmers protest  kumbakonam  thiru arooran sugars limited  sugarcane farmers protest in kumbakonam  farmers protest  கரும்பு விவசாயிகள் போராட்டம்  9வது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்  கரும்பு விவசாயிகள்  விவசாயிகள் போராட்டம்  தனியார் சர்க்கரை ஆலை  தருமண்டங்குடி  முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு  திரு ஆருரான் சர்க்கரை ஆலை  சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் போராட்டம்  சர்க்கரை ஆலை
கரும்பு விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : Dec 8, 2022, 10:54 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ம் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று (டிசம்பர் 7) 8-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இதுவரை ஆலை நிர்வாகமோ, தமிழக அரசோ கண்டு கொள்ளாத நிலையில், 9-வது நாளான இன்று (டிசம்பர் 8) தங்களது கோரிக்கைகளை பறை அடித்து, தண்டோரா போட்டு வலியுறுத்தினர்.

கரும்பு விவசாயிகள் போராட்டம்

தங்களது எதிர்ப்பினை நூதன முறையில் பதிவு செய்த விவசாயிகள், நிலுவை தொகை மற்றும் வங்கி கடனை முழுமையாக ஆலை நிர்வாகம் வழங்க முன்வராவிட்டால், ஆலையை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: அறநிலையத்துறை சுற்றறிக்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.