தஞ்சாவூர் குடும்பம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை 2015- 2017ஆம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு, டன் ஒன்றுக்கு 450 ரூபாய் வீதம் 27.5 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருந்துள்ளது.
இதனை வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அறுபது நாட்களில் நிலுவைத் தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நிலுவைத் தொகையை தீபாவளிக்குள் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் தீபாவளிக்குள் நிலுவை தொகை வழங்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முடிதிருத்தம் செய்ய யாரும் வராததால் எலி மருந்து சாப்பிட்ட உரிமையாளர் உயிரிழப்பு