தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் அறந்தாங்கி முக்கம் பகுதியில் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் தலைமையில் பொதுமக்களுக்கு மூன்றாவது கரோனா அலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, கைகளைச் சுத்தம் செய்வது எப்படி, முகக்கவசம் அணிவது எப்படி என்று விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் காவல் துறை அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கைகளை எப்படிச் சுத்தம் செய்வது என்பது குறித்தும், முகக்கவசம் எப்படி அணிவது என்றும் செய்துகாட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: 'மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்'