கரோனா வைரஸ் பாதிப்புக் காலத்தில் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் ஊரடங்கு காலகட்டத்தில் வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடனுக்காக மாதந்தோறும் செலுத்தவேண்டிய தவணைத் தொகையை, மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
மக்களின் இடர்பாடுகளை அறிந்து நுண்நிதி நிறுவனங்களில் செலுத்தவேண்டிய கடன் தவணைத் தொகையை, மூன்று மாத காலகட்டத்திற்கு ஜூன் 1ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை வசூல் செய்வதை தவிர்க்குமாறு நுண்நிதி நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நுண்நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை வசூல் செய்வதற்காக, கடன் பெற்றவர் வீட்டிற்குச் சென்று கட்ட சொல்லி சிரமப்படுத்தக் கூடாது. மேலும் புகார் தெரிவிக்கப்பட்டால் மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் விருப்பத்தின்பேரில் கடனை திருப்பிச் செலுத்துவோர் தங்களுடைய நிலையை உணர்ந்து பணத்தை செலுத்தலாம். அதுவரை நுண்நிதி நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்த, அவரிடம் கடுமையான வசூல் செய்யும் முறையை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீ விபத்தில் உயிரிழந்த ஆடுகள்: நிவாரணம் கோரும் உரிமையாளர்கள்