அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய குழு தலைவர் பதவியையும் திமுக வென்றது.
ஆனால் மதுக்கூர் ஒன்றியத்தை மட்டும் திமுகவால் வெல்ல முடியவில்லை. மதுக்கூர் ஒன்றியத்தை பொறுத்தவரை நேரடி தேர்தலாக இருந்தாலும் மறைமுகத் தேர்தலாக இருந்தாலும் துரைசெந்தில் என்பவரின் குடும்பத்தார்தான் வெற்றிபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது. கல்யாணஓடை என்ற கிராமத்தைச் சேர்ந்த துரைசெந்தில் மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவரது பெரியப்பா, மனைவி என இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் 20 வருடங்களாகவே ஒன்றிய பெருந்தலைவர் பதவியை வகித்துவருகின்றனர்.
இது குறித்து துரைசெந்தில், சாதி மத பாகுபாடு பார்க்காமல் தன்னிடம் வந்து உதவி கேட்பவர்கள் அனைவருக்கும் தம்மால் முடிந்தவரை உதவி செய்வதாகவும், அதனால் மக்கள் தன்மீதும் தனது குடும்பத்தார் மீதும் மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் துரை செந்தில். இதன்காரணமாகவே அதிமுக தலைமை தமக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை தந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் கடைசி நிவாரண மனுக்கள் தள்ளுபடி