தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் தாளாளர் சுப்ரமணியன் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ - மாணவிகள் தங்களது சொந்த முயற்சியில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த தயாரிப்புகளை கண்காட்சிக்காக கொண்டுவந்து வைத்தனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
மேலும் இங்கு இயற்கை உணவின் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டும் வகையில் தானிய உணவு வகைகள், கீரை வகைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தது. பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களை பள்ளி மாணவ மாணவிகள் விளக்கிக் கூறினர்.
இதையும் படிங்க...அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்: வெளிநாட்டவர் ஒருவர் கைது!