தஞ்சாவூரில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது என்பது குறித்து மாணவர்கள் பேரணியாகச் சென்று விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர். இந்தப் பேரணியை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி பழஞ்செட்டித்தெரு, சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை வரை இப்பேரணி நடைபெற்றது. 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் கன மழை, வெள்ளம், போன்ற பேரிடர் ஆபத்து காலங்களில் தங்களது உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்வது பற்றி தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வண்டிப்பேட்டை ஆலடி குளத்தில் நடைபெற்றது. இதில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் அவர்களைக் காப்பாற்றும் வழிமுறைகள் பற்றியும் மாணவர்களுக்கு செய்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பள்ளிமாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!