ETV Bharat / state

வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊராட்சித் தலைவர் - Coronavirus awarness program

தஞ்சாவூர்: திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் ஊராட்சித் தலைவர் வீடு வீடாகச் சென்று கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் ஊராட்சி மன்றத்தலைவர்

author img

By

Published : Apr 26, 2020, 1:24 AM IST

நாட்டில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் ஊராட்சித் தலைவர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் சுகாதார பணியாளர்களுடன் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் ஊராட்சி மன்றத்தலைவர்

பொதுமக்களின் வீடுகளுக்கு கிருமி நாசினி தெளித்தும், கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் அவர் வழங்கினார். பின்னர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மருத்துவர்கள் குழு அமைத்து பொதுமக்களுக்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற பல்வேறு நோய்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்கிய அமைச்சர் துரைக்கண்ணு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.