ETV Bharat / state

காவி உடை,நெற்றியில் விபூதியுடன் அம்பேத்கர்: குருமூர்த்தி கைது - திருமாவளவன் கண்டனம்! - Political news

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவி உடையுடனும் நெற்றியில் விபூதியுடனும் உள்ள அம்பேத்கரின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவி உடை.. நெற்றியில் விபூதியுடன் அம்பேத்கர்: குருமூர்த்தி கைது - திருமாவளவன் கடும் கண்டனம்!

author img

By

Published : Dec 6, 2022, 3:38 PM IST

தஞ்சாவூர்: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கும்பகோணம் மாநகரில் உள்ள நாகேஸ்வரன் கீழ வீதி, பாலக்கரை மற்றும் காந்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் விபூதி பூசியவாறும், காவிச் சட்டை அணிந்தவாறும் உள்ள அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில், ‘காவி(ய)த் தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் காவித்துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், தற்போது அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கும் விபூதி பூசி காவிச்சட்டை அணிந்தவாறு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் செய்தி தீயாக பரவியதைத் தொடர்ந்து கும்பகோணம் நகரின் பல்வேறு இடங்களில் இருந்த போஸ்டர்கள் காவல் துறையினரால் கிழித்து அகற்றப்பட்டது. இருப்பினும், சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி பதற்றத்தை ஏற்படுத்திய இந்து மக்கள் கட்சியைக் கண்டித்தும், அதன் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் மாநிலச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், நீலப்புலிகள் இயக்கத்தினர், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் என நூற்றுக்கணக்கானோர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும் அவர்கள் ஊர்வலமாக திரண்டு கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்து, அர்ஜூன் சம்பத் மற்றும் குருமூர்த்தியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, அங்கேயே முற்றுகையிட்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கும்பகோணம் டிஎஸ்பி அசோகன், “சர்சைக்குரிய சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தி

எனவே போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், அர்ஜூன் சம்பத்தையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் எனவும், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதனால் தொடர்ந்து கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவி உடையுடனும் நெற்றியில் விபூதியுடனும் உள்ள அம்பேத்கரின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை - பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை - தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து, 10 லட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்கமாட்டேன் என உறுதிமொழியேற்ற அம்பேத்கருக்கு பட்டை - குங்குமமிட்டு காவி உடை போட்டு, அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "பாஜகவுடனான உறவு முடிந்தது" - அண்ணாமலைக்கு சூர்யா சிவா அட்வைஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.