தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள குளத்தில், காசாங்குளம் சிவன், ஆஞ்சநேயர், விநாயகர் கோயில்களுக்கு வரும் வரும் பக்தர்கள் நீராடிச் செல்வது வழக்கம்.
இந்தக் குளமானது கடந்த சில தினங்களாக மிகவும் அசுத்தமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜன.12) அந்த குளத்தில் இருந்த மீன்கள் அனைத்தும் திடீரென செத்து மிதந்ததால் துர்நாற்றம் வீசிவருகிறது.
இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பக்தர்கள் புனித நீராடும் குளம் தொற்றுநோய் பரப்பும் வகையில் துர்நாற்றம் வீசுவது பலரையும் வேதனையடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கரோனா