ETV Bharat / state

கரோனா நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் துரைக்கண்ணு - agriminister press meet

தஞ்சாவூர்: கரோனா நோய் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

research-meeting-on-virus-prevention
research-meeting-on-virus-prevention
author img

By

Published : Mar 30, 2020, 4:24 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, கரோனா நோய் வராமல் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிரதமர் மோடி, முதலமைச்சர் தொலைக்காட்சி வாயிலாக உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆலோசனை செய்து வருவதுடன் மக்களை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து பேசிய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 113 பேர் அனுமதிக்கப்பட்டு பெரும்பாலானோர் திருப்பி அனுப்பி விட்டதாகவும் 920 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு

இக்கூட்டத்தில் சமூக பரவலை பின்பற்றும் வகையில் அனைத்து அலுவலர்களும் இடைவெளிவிட்டு அமர்ந்து முகக் கவசம் அணிந்திருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா நிவாரணம்: திமுக சார்பில் ஒரு கோடி நிதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.