தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தின் முள்ளங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா பாரதிதாசன் என்பவர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குச் சுயேச்சையாக போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
முறைகேடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அவர் வெற்றி பெற்றதாகவும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளைப் பயன்படுத்தி கள்ளஓட்டு போட்டதாகவும் கூறி அதே பதவிக்கு போட்டியிட்ட இளங்கோவனும் மற்ற வேட்பாளர்களும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.
அம்பிகா பணம் கொடுக்கும் வீடியோவை ஆதரமாக அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் மற்ற வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கடைசிப் படத்திலிருந்து எமோஷனலாக விடைபெற்ற ஜேம்ஸ்பாண்ட்!