ETV Bharat / state

ராஜராஜ சோழன் 1037வது சதய விழா: தஞ்சை மாவட்ட ஆட்சியர் மரியாதை - King Rajarajacholan

ராஜராஜசோழனின் 1037வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, அவரது முழு திருவுருவச் சிலைக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுர ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராஜராஜ சோழன் 1037வது சதய விழா: மாவட்ட ஆட்சியர் மரியாதை

author img

By

Published : Nov 3, 2022, 11:04 AM IST

தஞ்சாவூர்: தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் தஞ்சை பெரிய கோயிலை எழுப்பி, சோழ பேரரசை ஆண்ட அருண்மொழிவர்மன் என்கிற ராஜராஜ சோழனின் 1037வது ஆண்டு சதயவிழா தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த ராஜராஜசோழன் பிறந்த தினம் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விழாவின் இரண்டாம் நாளான இன்று (நவ 3) ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜராஜசோழனின் 1037வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, அவரது முழு திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுர ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் சதய விழா குழுவினர்கள் ராஜராஜ சோழனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக திருமுறை பதிகம் யானை மீது வைத்து கொண்டு வரப்பட்டு சிவகனங்கள் இசைக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க திருமுறை திருவீதி உலா பெரியகோயிலில் இருந்து புறப்பட்டு நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தது.

இதையும் படிங்க: ராஜராஜசோழனின் பிறந்த விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.