தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இளைஞர்கள் அமைப்பு ஒன்று தானாக முன்வந்து நீர் நிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்த முயற்சியின் முதற்கட்டமாக நகராட்சிக்குட்பட்ட அய்யனார் கோயில் குளத்தை மீட்டெடுத்து தூர்வார இளைஞர்கள் அமைப்பு முன்வந்துள்ளது.
இந்த குளம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்ததாகவும், கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும் தெரிகிறது. பல எதிர்ப்புகளுக்கு இடையில் குளத்தை இளைஞர்கள் அமைப்பு தூர்வாரியது. இந்த அமைப்புக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த அய்யனார் கோயில் குளத்தை அடுத்து, மேலும் பல நீர் நிலைகளை தூர்வாரும் முயற்சியில் ஈடுப்படப்போவதாகவும் அந்த இளைஞர் அமைப்பினர் உறுதிபட தெரிவித்துள்ளனர்.