ETV Bharat / state

கட்டைப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை - பிறந்த நான்கு நாள்களான குழந்தை கடத்தல்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாள்களே ஆன பெண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பெண் குழந்தை கடத்தல்
பெண் குழந்தை கடத்தல்
author img

By

Published : Oct 8, 2021, 4:08 PM IST

Updated : Oct 8, 2021, 7:33 PM IST

தஞ்சாவூர்: பர்மா காலனியைச் சேர்ந்த குணசேகரன் - ராஜலட்சுமி இருவரும் வீட்டின் எதிர்ப்பையும் மீறி, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், உறவினர்கள் யார் தயவுமின்றி தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில், ராகலட்சுமிக்கு யாரும் உதவிக்கு இல்லாததைக் கண்ட பெண் ஒருவர், ராஜலட்சுமிக்கு மூன்று நாள்களாக மருத்துவமனையில் உதவி செய்துள்ளார்.

ராஜலட்சுமியை இன்று காலை கழிவறைக்கு அனுப்பிவிட்டு, தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி ராஜலட்சுமியின் கணவரை வெந்நீர் வாங்க அனுப்பியுள்ளார்.

சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

பெற்றோர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட அவர், பெண் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார்.

பெண் குழந்தைக் கடத்தல்

பின்னர், அங்கு குழந்தையும் அப்பெண்ணும் இல்லாததைக் கண்ட தம்பதி அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை

Last Updated : Oct 8, 2021, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.